இந்திய கடலோர காவல்படையின் ‘சமுத்ர பிரஹாரி’, 'வஜ்ரா' மற்றும் 'வெபாவு' ஆகிய கப்பல்களின் பங்களிப்பை கடற்படைத் தளபதியின் பாராட்டுக்கு
2021 மே மாதம் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுக கடல் பகுதியில் தீ விபத்துக்குள்ளான MV X-PRESS PEARL என்ற கப்பலில் பேரழிவு நிலைமையை நிர்வகிக்க மற்ற பங்குதாரர்களுடன் இணைந்து செய்த சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இன்று (ஜூன் 10, 2021)கொழும்பு துறைமுகத்தில் வைத்து இந்திய கடலோர காவல்படையின் ‘சமுத்ர பிரஹாரி’(ICGS Samudra Prahari ), 'வஜ்ரா' (ICGS Vajra) மற்றும் 'வெபாவு' (ICGS Vaibhav) ஆகிய கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பாராட்டு கடிதங்களை வழங்கினார்.
MV X-PRESS PEARL கப்பலில் ஏற்பட்ட பேரழிவு நிலைமையை நிர்வகிக்க உதவி வழங்குமாறு இந்திய கடலோர காவல்படையிடம் கடற்படைத் தளபதி விடுத்த வேண்டுகோளுக்கு உடனடியாக பதிலளித்து இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 'வெபாவு' (ICGS Vaibhav) மற்றும் ‘வஜ்ரா’ (ICGS Vajra) கப்பல்கள் 2021 மே 25,26 திகதிகளிலும், கடல்சார் சுற்றுச்சூழல் பாதிப்பு தடுப்பு மற்றும் தீயணைப்பு கப்பலான ‘சமுத்ர பிரஹாரி’(ICGS Samudra Prahari ) 2021 மே 29 ஆம் திகதியும் தீ பிடித்த கப்பல் உள்ளகடல் பகுதிக்கு வந்து MV X-PRESS PEARL கப்பலில் ஏற்பட்ட பேரழிவு நிலைமையை நிர்வகிக்க மற்ற பங்குதாரர்களுடன் இணைந்து உதவி வழங்கியது.
அதன்படி, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பையும் ஒத்துழைப்பையும் மேலும் மேம்படுத்தி இந்திய கடலோர காவல்படையின் ‘சமுத்ர பிரஹாரி’(ICGS Samudra Prahari ) ‘வஜ்ரா’ (ICGS Vajra) மற்றும் 'வெபாவு' (ICGS Vaibhav) ஆகிய கப்பல்களின் குழுவினர் X-PRESS PEARL கப்பலில் ஏற்பட்ட பேரழிவு நிலைமையை நிர்வகிக்கும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட முதல் பங்குதாரர்களாக மற்ற பங்குதாரர்களுடன் சேர்ந்து காட்டிய சிறந்த தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் ‘சமுத்ர பிரஹாரி’ கப்பலின் கட்டளை அதிகாரி கே சீதாராம் (DIG K Sitaram) அவர்களுக்கு மற்றும் ‘வஜ்ரா’ கப்பலின் கட்டளை அதிகாரி அலெக்ஸ் தாமஸ் (DIG Alex Thomas) அவர்களுக்கு இவ்வாரு கொழும்பு துறைமுகத்தில் வைத்து இன்று (ஜூன் 10, 2021) பாராட்டு கடிதங்கள் வழங்கினார்.
மேலும், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 'வெபாவு' (ICGS Vaibhav) கப்பல் தற்போது தாய்நாட்டிற்கு சென்றுள்ளதுடன் அதன் கட்டளை அதிகாரி சுரேஷ் குருப் (Commandant Suresh Kurup) அவருடைய பாராட்டு கடிதத்தை அவருக்கு வழங்குவதுக்காக இந்திய உயர் ஸ்தானிகராலயமிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந் நிகழ்வுக்காக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பக்லே (Gopal Baglay)அவர்கள், மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கேப்டன் விகாஸ் சூட் (Captain Vikas Sood) அவர்கள் மற்றும் கடற்படைத் தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.