நாளந்தா கல்லூரியின் 85 வது பழைய சிறுவர் சங்கத்தினால் பூஸ்ஸ இடைநிலை சிகிச்சை மையத்திற்கு பல பொறுட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன
கடற்படையால் பராமரிக்கப்படும் பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தின் பயன்பாட்டிற்கான பொருட்களை நாளந்தா கல்லூரியின் 85 வது பழைய சிறுவர் சங்கத்தினால் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹெவகேவிடம் வழங்கும் நிகழ்வு 2021 ஜூன் 03 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் இடம்பெற்றது.
கோவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவாக இந்த இடைநிலை சிகிச்சை மையம் 2021 மே 04 அன்று பூஸ்ஸ கடற்படை தளத்தில் கடற்படையால் நிறுவப்பட்டது. அதன்படி, இந்த இடைநிலை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான 50 மெத்தைகள் மற்றும் 200 தலையணைகள் நாளந்தா கல்லூரியின் 85 வது பழைய சிறுவர் சங்கத்தின் உறுப்பினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இந் நிகழ்வுக்காக கொழும்பு நாளந்தா கல்லூரியின் 1985 ஆண்டு பழைய சிறுவர் சங்கத்தின் உறுப்பினர்கள், தெற்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சந்திம சிரிதுங்க மற்றும் தெற்கு கடற்படை கட்டளை துணைத் தளபதி கமடோர் ஹரிந்திர ஏகநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.