கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்துப் படி கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி 2021 மே 24 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வுக்கு இணையாக கிழக்கு கடற்படை கட்டளையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு துனை தலைமை அதிகாரி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்னவின் பங்கேற்புடன் இன்று (2021 மே 30) இலங்கை கடற்படை கப்பல் 'திஸ்ஸ' சேவா வனிதா முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

">

சேவா வனிதா பிரிவு மூலம் கிழக்கு கடற்படை கட்டளையில் இரத்த தான நிகழ்வொன்று நடத்தப்பட்டது

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்துப் படி கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி 2021 மே 24 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வுக்கு இணையாக கிழக்கு கடற்படை கட்டளையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு துனை தலைமை அதிகாரி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்னவின் பங்கேற்புடன் இன்று (2021 மே 30) இலங்கை கடற்படை கப்பல் 'திஸ்ஸ' சேவா வனிதா முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தற்போதுள்ள தொற்றுநோய் காரணத்தினால் நன்கொடையாளர்களுக்கு இரத்த தானம் செய்வது கடினமானது. இக் காரணத்தினால், தேசிய இரத்த வங்கி உள்ளிட்ட பிற வைத்தியசாலைகளில் இரத்த இருப்புக்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. அதன் படி கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ் பணிப்பாளர் நாயகம் சுகாதார சேவைகள் மற்றும் இரத்த வங்கிகளின் ஒருங்கிணைப்பில் கிழக்கு கடற்படை கட்டளையின் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றதுடன் கிழக்கு கடற்படை கட்டளையின் நிறுவனங்கள் மற்றும் கப்பல்களை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை கடற்படை கப்பல் திஸ்ஸ நிறுவனத்தின் முன்பள்ளி வளாகத்தில் இன்று (2021 மே 30) 0830 மணி முதல் 1800 மணி வரை நடைபெற்ற இரத்த தான நிகழ்வில் 275 மாலுமிகள் பங்கேற்றனர்.

மேலும்,கொவிட் 19 தடுப்புக்கான சுகாதார வழிகாட்டுதல்களின் படி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் துணை தளபதி, ரியர் அட்மிரல் அனுர தனபால, செயல் கொமடோர் சுகாதார கண்காணிப்பாளர் (கி) கேப்டன் டி.கே. ஆரியதேவ உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் பெண் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.