கடற்படை விளையாட்டு வீராங்கணி டெஹானி எகொடவெல 2020 டோக்கியோ ஒலிம்பிக் பொட்டித்தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்
இலங்கை கடற்படையில் பணியாற்றும் பெண் மாலுமியான டெஹானி எகொடவெல, பெண்கள் 10 மீ வாயு துப்பாக்கி 0.177 போட்டி மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் பொட்டித்தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்.
2011 முதல் கடற்படை படப்பிடிப்பு அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் மாலுமி டெஹானி எகொடவெல, 2012 முதல் தேசிய படப்பிடிப்பு அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு (07) முறை இலங்கையின் சிறந்த துப்பாக்கி சுடும் வீராங்கணியாக மற்றும் பல வெளிநாட்டு போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்தி பங்கேற்று சிறந்த திறமையைக் காட்டியுள்ளார். 2018 முதல் மகளிர் 10 மீ வாயு துப்பாக்கி 0.177 போட்டியில் இலங்கை சாதனையை படைத்துள்ள இவர், 2019 முதல் பெண்கள் சகலதுறை 50 மீ துப்பாக்கி 0.22 இல் இலங்கை சாதனையையும் படைத்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு இந்தியாவில் மற்றும் 2019 ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் 50 மீ துப்பாக்கி 0.22 அணி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், 2019 ஆம் ஆண்டில் கட்டாரில் நடைபெற்ற மகளிர் 50 மீ துப்பாக்கி 0.22 போட்டியில் இலங்கை சாதனை படைத்தார். அவரது சிறந்த செயல்திறன் காரணமாக, உலக தரவரிசையில் மகளிர் 10 மீ வாயு துப்பாக்கி 0.177 என்ற போட்டியில் முன்னிலை வகித்த காரணத்தினால் இவ்வாரு 2020 டோக்கியோ ஒலிம்பிக் பொட்டித்தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்.
இலங்கை கடற்படை விளையாட்டு வாரியத்தின் தலைவராக பணியாற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் கீழ், விளையாட்டுத் துறையில் வளங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவது மூலம் கடற்படையின் மற்றும் நாட்டின் நற்பெயரை மேம்படுத்த கடற்படை விளையாட்டு வீர வீராங்கணிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கின்றனர். மேலும், கடற்படை படப்பிடிப்பு அணியின் தளபதி கேப்டன் (கடற்படை காலாட்படை) ஆர்.ஏ ரேமன்ட் அவர்களின் மேற்பார்வையில் தொடர்ந்து பயிற்சி பெறும் கடற்படை மாலுமி டெஹானி எகொடவெலவின் தற்போதைய பயிற்சியாளராக கடற்படை வீரர் (ஓய்வு) யூ.எம் பிரேமலால் பணியாற்றுகிரார்.
அதன் படி, கடற்படை மாலுமி டெஹானி எகொடவெல, தனது தொடர்ச்சியான பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாக, பெண்கள் துப்பாக்கி சுடு போட்டி மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் பொட்டித்தொடருக்கு தகுதி பெற்றதன் மூலம் கடற்படைக்கும் நாட்டிற்கும் பெரும் மரியாதை அளித்துள்ளார். எதிர்காலத்தில், மகளிர் துப்பாக்கி சுடு போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெறுவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் பார்வையில் கடற்படை மற்றும் இலங்கையின் நற்பெயரை அவர் மேலும் உயர்த்துவார்.