கடற்படை சேவா வனிதா பிரிவு இதுவரை நடத்திய மிகப்பெரிய இரத்த தான நிகழ்வை அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி நடத்தியது
கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின் படி கடற்படை சேவா வனிதா பிரிவு ஏற்பாடு செய்த இரத்த தான நிகழ்வொன்று கடற்படை உறுப்பினர்களின் பங்கேற்புடன் அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி இன்று (மே 24, 2021) நடைபெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படை தலைமையகத்தில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வில் கழந்து கொண்டார்.
தற்போதைய கொவிட் 19 தொற்றுநோய் காரணத்தினால் நன்கொடையாளர்களுக்கு இரத்த தானம் செய்வது கடினமானது. இக் காரணத்தினால், தேசிய இரத்த வங்கி மற்றும் அபேக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட பிற வைத்தியசாலைகள் கடற்படையிடம் விடுத்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த இரத்த தான நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் படி வெசக் போய தினத்தை முன்னிட்டு இந்த இரத்த தான திட்டத்தை இன்று நடத்த கடற்படை சேவா வனிதா பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இன்று (மே 24, 2021) நாள் முழுவதும் இடம்பெற்ற இந்த இரத்த தான நிகழ்வுகளுக்கு மேற்கு கடற்படை கட்டளையின் 576 கடற்படையினர், வட மத்திய கடற்படை கட்டளையின் 328 கடற்படையினர், வடமேற்கு கடற்படை கட்டளையின் 105 கடற்படையினர், வடக்கு கடற்படை கட்டளையின் 341 கடற்படையினர், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் 81 கடற்படையினர் மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் 180 கடற்படையினர் உட்பட மொத்தம் 1611 கடற்படையினர் பங்களித்தனர்.
கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி இந்த திட்டம் நடத்தப்பட்டதுடன் மேலும் இந்த திட்டத்திற்கு இணையாக 2021 மே 30 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையில் இரத்த தானத் திட்டமொன்று நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேற்கு கடற்படை கட்டளை