கட்டுநாயக்க ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் மேற்கொள்ளப்படும் கொவிட் 19 தடுப்பூசி திட்டத்துக்கு கடற்படையின் ஆதரவு
கொவிட் 19 பரவுவதை கட்டுப்படுத்துவதுக்காக மேற்கொள்ளப்படும் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கட்டுநாயக்க ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் கோவிட் 19 அபாயத்தை எதிர்கொண்டு சேவைகளை வழங்கும் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு இன்று (2021 மே 15) கட்டுநாயக்க ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் சுகாதார மருத்துவ அதிகாரியுடன் இணைந்து கடற்படையினரால் “சினோபார்ம்” (Sinopharm) தடுப்பூசியை வழங்கப்பட்டது.
அதன்படி, கோவிட் 19 அபாயத்தை எதிர்கொண்டு ஏற்றுமதிக்கான உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் கட்டுநாயக்க ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் உள்ள 05 தொழிற்சாலைகளில் ஊழியர்கள் மற்றும் முதலீட்டு வாரியத்தின் அதிகாரிகள் உட்பட 500 பேருக்கு குறித்த “சினோபார்ம்” (Sinopharm) தடுப்பூசியை கடற்படை மருத்துவ பணியாளர்களால் இன்று வழங்கப்பட்டதுடன் வரும் வாரத்தில் சுமார் 48 தொழிற்சாலைகளை உள்ளடக்கி இந்த தடுப்பூசி திட்டம் கட்டுநாயக்க சுகாதார மருத்துவ அலுவலருடன் இணைந்து கடற்படையினரால் மேற்கொள்ளவுள்ளது.