கடற்படை வீரர்களின் பங்களிப்புடன் ஹம்பாந்தோட்டையில் இரத்த தான திட்டமொன்று இடம்பெற்றது
கடற்படை மற்றும் தேசிய இரத்தமாற்ற சேவை ஏற்பாடு செய்த இரத்த தான திட்டமொன்று ஹம்பாந்தோட்டை இலங்கை கடற்படை கப்பல் காவந்திஸ்ஸ நிறுவனத்தில் இன்று (2021 மே 14) நடைபெற்றது.
கொவிட் 19 வைரஸின் தாக்கத்துடன், ஹம்பாந்தோட்டை இரத்த வங்கியில் உள்ள இரத்த இருப்புகள் வேகமாக குறைந்து வருவதாகவும் தற்போதுள்ள இரத்த பற்றாக்குறையைப் பற்றியும் இரத்த வங்கியின் இயக்குனர் விடுத்த வேண்டுகோளின் படி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அறிவுறுத்தலின் பேரில் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகேவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த இரத்த தான திட்டம் இன்று (2021 மே 14) ஹம்பாந்தோட்டை இலங்கை கடற்படை கப்பல் காவந்திஸ்ஸ நிறுவனத்தில் நடைபெற்றது. தற்போதுள்ள தொற்றுநோய் நிலைமையுடன் இந்த உன்னதமான காரணத்தை ஒரு தேசிய தேவையாக கருதி, இலங்கை கடற்படை கப்பல் காவந்திஸ்ஸ நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட ஏராளமான கடற்படை வீரர்கள் தங்கள் இரத்தத்தை தானம் செய்ய முன்வந்தனர்.
தற்போதுள்ள கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வை வெற்றிகரமாக்குவதற்கு ஹம்பாந்தோட்டை இரத்த வங்கியின் பணியாளர்கள் மற்றும் கடற்படை மருத்துவ ஊழியர்கள் தங்களது முழு ஆதரவையும் வழங்கினர். இதற்கிடையில், நாட்டில் எந்தவொரு நிகழ்வின் போதும் தனது முழுமையான ஆதரவை வழங்க கடற்படை தயாராக உள்ளது.