‘Galaxy Cup’ 25 வயதுக்குட்பட்ட சூப்பர் லீக் மகளிர் கைப்பந்து கிண்ணம் – 2021 கடற்படை பெற்றுள்ளது
ශஇலங்கை கைப்பந்து கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Galaxy Cup’ 25 வயதுக்குட்பட்ட சூப்பர் லீக் கைப்பந்து சாம்பியன்ஷிப் - 2021 போட்டித் தொடரில் இன்று (ஏப்ரல் 24, 2021) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய கடற்படை பெண்கள் அணி ஹைட்ரமணி விளையாட்டுக் கழக மகளிர் அணியை தோற்கடித்து கிண்ணத்தை வென்றது. மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் கவுன்சிலின் உள்ளரங்க அரங்கத்தில் நடைபெற்ற இந்த பெண்கள் இறுதி போட்டியில் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கலந்து கொண்டார்.
‘Galaxy Cup’ 25 வயதுக்குட்பட்ட சூப்பர் லீக் கைப்பந்து சாம்பியன்ஷிப் - 2021 போட்டித்’ தொடருக்காக இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, தேசிய இளைஞர் சேவைகள் கவுன்சில், ஹைட்ராமணி விளையாட்டுக் கழகம், ரதனபால விளையாட்டுக் கழகம், மாஸ் கேஷுவல்லைன் நிறுவனம், கோல்டன் பேர்ட் விளையாட்டுக் கழகம், ஹுங்கம விஜயபா விளையாட்டுக் கழகம் மற்றும் அம்பார சூப்பர் கிங்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகிய தீவின் பிரபலமான 10 பெண்கள் கைப்பந்து அணிகள் பங்கேற்றன.
இந்த போட்டித்தொடரின் லீக் கட்டத்தில் கடற்படை மகளிர் கைப்பந்து அணி ஹைட்ராமணி விளையாட்டுக் கழகம், இலங்கை இராணுவம், மாஸ் கேஷுவல்லைன் நிறுவனம் மற்றும் அம்பார சூப்பர் கிங்ஸ் அணி ஆகியவற்றை வீழ்த்தி போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியது. விமானப்படை பெண்கள் அணிக்கு எதிரான அரையிறுதியில் 25-20, 25-20 மற்றும் 25-14 ஆகிய மூன்று சுற்றுகளையும் வென்றதன் மூலம் கடற்படை பெண்கள் கைப்பந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
அதன்படி, இன்று மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் கவுன்சில் உட்புற மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹைட்ராமணி விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான 04 சுற்றுகளில், 03 சுற்றுகள் 25-19, 25-10, 25-23 என்ற கணக்கில் வென்றி பெற்று ‘Galaxy Cup’ 25 வயதுக்குட்பட்ட சூப்பர் லீக் கைப்பந்து சாம்பியன்ஷிப் - 2021 போட்டித் தொடர் கடற்படை பெண்கள் கைப்பந்து அணி வென்றது.
பரிசு வழங்கும் விழாவில், கடற்படை மகளிர் அணிக்கு 11 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன, கடற்படை வீராங்கனி எச்.பி.டி.சி ரனவீர (சிறந்த அமைப்பாளர்), கடற்படை வீராங்கனி எச்.ஜி.எஸ் லக்சானி (சிறந்த தடுப்பவர்) மற்றும் கடற்படை வீராங்கனி கே.எல். பெரேரா ( போட்டித் தொடரில் சிறந்த வீரர்) ஆகிய விருதுகளை வென்றனர். இதற்கிடையில், இலங்கை கைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் திரு. காஞ்சன ஜெயரத்ன அவர்களினால் வெற்றி கிண்ணம் கடற்படை அணிக்கு வழங்கப்பட்டது.