கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன 2021 ஏப்ரல் 03 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவும் இணைந்துள்ளார்.

">

கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன 2021 ஏப்ரல் 03 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவும் இணைந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளையின் செயல்பாடுகள் மற்றும் நலன்களை மேற்பார்வையிட்டார். அதன்படி, கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளையின் செயல்பாட்டு அறையை ஆய்வு செய்த்துடன், வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கட்டளைத் துறைகளின் தளபதிகளை, கப்பல்கள் மற்றும் படகுகளின் கட்டளை அதிகாரிகளை உரையாற்றினார். அப்போது, போதைப்பொருள் மற்றும் பிற கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க தொடர்ச்சியான ரோந்து மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு மீன்பிடிக் படகுகள் இலங்கைக் கடலுக்குள் நுழைவதைத் தடுக்க கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும் விழிப்புணர்வு மற்றும் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நயினாதீவு ரஜமஹா விஹாரயத்தில் நடைபெறவிருக்கும் 2021 மாநில வெசாக் திருவிழாவை வெற்றிபெறச் செய்ய வேண்டிய பங்களிப்பு குறித்தும் கடற்படை தளபதி இங்கு அறிவுறுத்தினார்.

மேலும், கொடி கட்டளையுடன் இணைக்கப்பட்ட மாலுமிகளின் தங்குமிடத்திற்காக புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி வீட்டுவசதி கட்டிடம் இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவனத்தில் கடற்படைத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கப்பல்கள் மற்றும் படகுகளில் கடமையாற்றும் கடற்படை வீரர்களுக்கு தேவையான தங்குமிட வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் கட்டப்பட்ட இந்த மூன்று மாடி கட்டிடத்தை நிர்மாணிக்க பங்களித்த கடற்படை வீரர்களையும் கடற்படை தளபதி பாராட்டினார்.

கடற்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, அனைத்து கடற்படை உருப்பினர்களின் நிதி நன்கொடைகளுடன் செயல்படுத்தப்படும் குறைந்த வசதி உள்ள பாடசாலைகளில் அத்தியாவசிய வசதிகளை மேம்படுத்துவதற்கான கடற்படை சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் வடக்கு கடற்படை கட்டளையின் அபிவிருத்திக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட யாழ்ப்பாணம், மண்டத்தீவின் ரோமன் கத்தோலிக்க கல்லூரி, இந்த பயணத்தின் போது கடற்படைத் தளபதி பார்வையிட்டார். இங்கு கடற்படை தளபதியை பாடசாலையின் அதிபர் உட்பட பாடசாலையின் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர். கடற்படைத் தளபதி கடற்படையினரால் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் எதிர்கால மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து பாடசாலையின் அதிபர் உட்பட ஊழியர்களுக்கு விளக்கமளித்தார்.

கடற்படையின் பங்களிப்புடன் நயினாதீவு பண்டைய ராஜமஹா விஹாரய வளாகத்தில் நிர்மானிக்கப்பட்ட மூன்று மாடி ஓய்வு இல்லத்தையும் கடற்படைத் தளபதி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுகளுக்காக வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசுரிய, துணைத் தளபதி கமடோர் ஜே.பி. பிரேமரத்ன உட்பட கடற்படை தலைமையகம் மற்றும் வடக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட பல மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர்.