கடற்படையின் பங்களிப்புடன் நயினாதீவு பண்டைய ராஜமஹா விஹாராயத்தில் கட்டப்பட்ட பிராக்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ தேரர் நினைவு மூன்று மாடி ஓய்வு இல்லத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2021.ஏப்ரல் 03) திறந்து வைத்தார். இந் நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கழந்துகொண்டார்.

">

நயினாதீவு ரஜமஹா விஹாரயத்தில் நிர்மானிக்கப்பட்ட பிராக்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ தேரர் நினைவு ஓய்வு இல்லம் கடற்படை தளபதியால் திறந்து வைக்கப்பட்டது

கடற்படையின் பங்களிப்புடன் நயினாதீவு பண்டைய ராஜமஹா விஹாராயத்தில் கட்டப்பட்ட பிராக்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ தேரர் நினைவு மூன்று மாடி ஓய்வு இல்லத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2021.ஏப்ரல் 03) திறந்து வைத்தார். இந் நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கழந்துகொண்டார்.

நயினாதீவு ரஜமஹா விஹாரயத்தின் தளபதி, வடக்கு இலங்கையின் தலைமை சங்கநாயக்க வண, நவந்தகல பதுமகித்தி திஸ்ஸ நாயகத் தேரரின் அறிவுறுத்தப்பட்டபடி பிராக்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ தேரரின் 18 வது நினைவு விழாவுக்காக கடற்படையின் பங்களிப்புடன் கட்டப்பட்ட இந்த பிராக்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ தேரர் நினைவு மூன்று மாடி ஓய்வு இல்லம் இன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த ஓய்வு இல்லம் மகா சங்க உறுப்பினர்கள் மற்றும் நயினாதீவு பண்டைய ராஜமஹா விஹாரயத்தை வணங்குவதற்காக வருகை தரும் பக்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கும். மேலும், கடற்படைத் தளபதி பண்டைய நயினாதீவு ராஜமஹா விஹாரயத்திக்கு மரியாதை செலுத்தி, 20 சங்கத்தினருக்கு மதியம் தானம் வழங்குவதில் பங்கேற்றார்.

மேலும், நயினாதீவின் மக்களுக்கு மதியம் உணவு வழங்குவதற்காக கடற்படை ஒரு சமூக சேவை திட்டமொன்று ஏற்பாடு செய்ததுடன், நயினாதீவு ரஜமஹா விஹாரயத்தின் தளபதி, வடக்கு இலங்கையின் தலைமை சங்கநாயக்க வண, நவந்தகல பதுமகித்தி திஸ்ஸ நாயகத் தேரரால் இந்த தீவின் திறமையான பாடசாலை குழந்தைகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன கழந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ருவன்வெலி மகா சேயவின் தலைமை சங்க தேரர் வண பல்லேகம ஹேமரதன தேரர் உட்பட மகா சங்க உறுப்பினர்கள், வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய, துனை தளபதி கொமடோர் ஜே.ஜி பிரேமரத்ன கடற்படை தலைமையகத்தில் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.