திருகோணமலை, கடற்படை மற்றும் கடல் அறிவியல் பீடத்திக்கு இந்திய கடற்படையிலிருந்து கற்றல் ஆதரவு
இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான நட்பின் விரிவாக்கமாக இந்திய கடற்படை வழங்கிய டார்பிடோ மற்றும் எரிவாயு விசையாழியின் வெட்டு மாதிரிகள் உட்பட கற்றல் உதவிகளை இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகர் அதி மேதகு கோபால் பக்லே (Gopal Baglay), அவர்களினால் 2021 மார்ச் 14 ஆம் திகதி திருகோணமலை, கடற்படை மற்றும் கடல் அறிவியல் பீடத்திக்கு வழங்கப்பட்டது.
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரன்பீர் சிங் (Karanbir Singh) 2019 ஆம் ஆண்டில் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமிக்கு விஜயம் செய்தபோது அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து, இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகர் அதிமேதகு கோபால் பாக்லே, (Gopal Baglay) அவர்கள் இந்த கற்றல் உதவிகளை கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் வய். என் ஜயரத்னவுக்கு வழங்கினார். இந்த கற்றல் உதவிகள் நீர்மூழ்கிக் கப்பல் போர், கடற்படை அறிவு, கடல்சார் மற்றும் பொறியியல் ஆகிய பாடசாலைகளில் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் எதிர்கால பயிற்சிக்கு பெரும் ஆதரவாக இருக்கும்.
இந்நிகழ்வுக்காக கடற்படை மற்றும் கடல் அறிவியல் பீடத்தின் தளபதி கமடோர் தம்மிக குமார, இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் விகாஸ் சூட் (Captain Vikas Sood) மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையில் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.