இலங்கை கடற்படையின் கண்டல் தாவரங்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 700 கண்டல் தாவரங்கள் நடுகை செய்யும் திட்டமொன்று வடக்கு கடற்படை கட்டளை மையமாக கொண்டு வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய தலைமையில் இன்று (2021 மார்ச் 14) நடைபெற்றன.

">

கடற்படையின் பங்களிப்பால் யாழ்ப்பாணம் பொன்னாலை கடற்கரை பிரதேசத்தில் 700 கண்டல் தாவரங்கள் நடுகை செய்யும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டன

இலங்கை கடற்படையின் கண்டல் தாவரங்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 700 கண்டல் தாவரங்கள் நடுகை செய்யும் திட்டமொன்று வடக்கு கடற்படை கட்டளை மையமாக கொண்டு வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய தலைமையில் இன்று (2021 மார்ச் 14) நடைபெற்றன.

கடலோர அரிப்பைத் தடுப்பதிலும், கடல் பல்லுயிரியலைப் பாதுகாப்பதிலும் கண்டல் தாவரங்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தொடர்ந்து பங்களித்து வரும் இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான எலார, உத்தர மற்றும் அக்போ ஆகிய நிருவனங்கள் இந்த திட்டத்தை யாழ்ப்பாணம் பொன்னாலை கடற்கரை பகுதியில் நடத்தினர். கடலோர சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் அதே வேளையில் மீன் வளர்ப்பிற்கு இயற்கையான சூழலை உருவாக்குவதால் கண்டல் தாவரங்கள் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரைக்கமைக்கு கீழ் மேற்கொள்ளப்படுகின்ற இந்த திட்டத்தால் இன்று 700 கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டன. இந் நிகழ்வுக்காக இலங்கை கடற்படை கப்பல் எலார, உத்தர மற்றும் அக்போ நிருவனங்களில் கட்டளை அதிகாரிகள், துறைத் தலைவர்கள் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.