கடற்படை மனிதவள பங்களிப்புடன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டுமானப் பணிகளை பாதுகாப்பு செயலாளர் திறந்து வைத்தார்

2021 மார்ச் 10 ஆம் திகதி இடம்பெற்ற கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 40வது ஆண்டு நிறைவு தின உத்தியோகபூர்வ இலச்சினை வெளியீடு விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அவர்கள் பங்கேற்றார். அங்கு கடற்படையின் மனிதவள பங்களிப்புடன் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டுமானப் பணிகளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பங்கேற்புடன் பாதுகாப்பு செயலாளரால் திறந்து வைக்கப்பட்டது.

அங்கு, பல்கலைக்கழகத்தில் அணிவகுப்பு சதுக்க பார்வையாளர் பகுதி, அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வுகூட கட்டிடம், புதிய மரைன் என்ஜின் சிமுலேட்டர் மற்றும் புத்தாக்க ஆய்வு கூடம், விளையாட்டு பார்வையாளர் கட்டிடத் தொகுதி, பணியாளர்கள் தங்குமிட கட்டிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கிளப் ஹவுஸ் கட்டிடம் ஆகியவை பாதுகாப்புச் செயலாளரினால் திறந்து வைக்கப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட இரண்டு மாடி அரங்கம், கிளப் ஹவுஸ் கட்டிடத்தை புதுப்பித்தல் மற்றும் பல்கலைக்கழகத்தில் அணிவகுப்பு சதுக்க பார்வையாளர் கட்டிடத்தில் கூரையை நிர்மாணித்தல் ஆகியவை கடற்படையின் மனிதவள பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கடற்படை மரைன் மற்றும் இயந்திர பொறியியல் துறையால் நிர்மாணிக்கப்பட்ட புதிய கலப்பின் இயந்திர அறை சிமுலேட்டர் ஒரு கப்பலின் இயந்திர அறையில் உள்ள அனைத்து கூறுகளையும் நடைமுறை மற்றும் மென்பொருள் முறையில் கையாளும் திறன் கொண்டுள்ளது. இந்த உருவகப்படுத்துதல் பயிற்சி அதிகாரிகளுக்கு ஒரு கப்பலின் இயந்திர அறையில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகள் பற்றிய அறிவைப் பெற உதவும்.

இந்த நிகழ்வில், மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) பி பி எஸ் சி நோனிஸ், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பல்கலைக்கழக பதிவாளர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மரையின் மற்றும் இயந்திர பொறியியல் துறைத் தளபதி கமடோர் பிரியங்கர திசாநாயக்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், கல்வி மற்றும் கல்விசார ஊழியர்கள், மற்றும் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.