இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை, இந்திய கடற்படையின் டோர்னியர் விமானமொன்று (Dornier Aircraft) மூலம் வான்வழி கண்காணிப்பு பயிற்சி நடவடிக்கையொன்று இலங்கையின் தென் கடல் பகுதியில் 2021 மார்ச் 02 முதல் 05 வரை நடத்தியது.

">

இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை, இந்திய கடற்படையுடன் இணைந்து வான்வழி கண்காணிப்பு பயிற்சியொன்றை மேற்கொண்டுள்ளது

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை, இந்திய கடற்படையின் டோர்னியர் விமானமொன்று (Dornier Aircraft) மூலம் வான்வழி கண்காணிப்பு பயிற்சி நடவடிக்கையொன்று இலங்கையின் தென் கடல் பகுதியில் 2021 மார்ச் 02 முதல் 05 வரை நடத்தியது.

இலங்கையின் தென் கடற்கரையில் தனித்துவமான பொருளாதார மண்டலத்தை உள்ளடக்கி கட்டுநாயக்க விமானப்படை தளத்திலிருந்து நான்கு முறை இந்த வான்வழி கண்காணிப்பு பயிற்சி மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த பயிற்சியில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த 07 விமான பார்வையாளர்களும், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 04 விமான பார்வையாளர்களும் பங்கேற்றனர். இலங்கையின் கடல் பகுதியில் தேடல் மற்றும் மீட்பு மண்டலங்களில் துன்பகரமான மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை கடற்படை தொடர்ந்து உதவுகின்ற பின்னணியில், இலங்கை விமானப்படையுடன் இணைந்து எதிர்கால பேரழிவு நிவாரண நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு இதுபோன்ற பயிற்சிகள் பெரிதும் உதவும்.

மேலும், இத்தகைய பயிற்சிகள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கான முக்கிய பங்குதாரர்களாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தும்.