கடற்படையின் பங்களிப்புடன் காலி, இமதூவ பரகொட ஸ்ரீ குணரத்ன முதன்மை பாடசாலையில் மானவர்களுக்காக கட்டப்பட்ட புதிய நூலக கட்டிடம் 2021 பிப்ரவரி 25 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

">

கடற்படை பங்களிப்புடன் காலி, இமதூவ பரகொட ஸ்ரீ குணரத்ன முதன்மை பாடசாலைக்கு நூலக கட்டிடம்

கடற்படையின் பங்களிப்புடன் காலி, இமதூவ பரகொட ஸ்ரீ குணரத்ன முதன்மை பாடசாலையில் மானவர்களுக்காக கட்டப்பட்ட புதிய நூலக கட்டிடம் 2021 பிப்ரவரி 25 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்ற சமூக சேவை திட்டங்களின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட இந்த நூலக கட்டடத்தின் கட்டுமான பணிகள் அமெரிக்காவில் வசிக்கும் திரு. டிலான் ஆரிவன்ச என்ற தொழிலதிபரின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் நிதியுதவியுடன் மற்றும் கடற்படையின் மனிதவளம் உதவியுடன் 2021 ஜனவரி 19 அன்று தொடங்கப்பட்டன. விரைவாக கட்டுமான பணிகள் முடிக்கப்பட்ட இந்த நூலக கட்டிடம் பிப்ரவரி 25 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் மற்றும் திரு. டிலான் அரியவன்சவின் பெற்றோரின் பங்களிப்பிலும் திறக்கப்பட்டது.

மேலும், கோவிட் 19 பரவாமல் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார ஆலோசனைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்ட இந்த திறப்பு விழாவுக்காக தெற்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி கமடோர் அருண தென்னகூன், இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிருவனத்தின் கட்டளை அதிகாரி உட்பட கடற்படையினர் மற்றும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கழந்து கொண்டனர்.