இலங்கை கடற்படை கப்பல் தீகாயு நிறுவனத்தில் கட்டப்பட்ட புதிய இளைய கடற்படையினர் விடுதி திறக்கப்பட்டது
இலங்கை கடற்படை கப்பல் தீகாயு நிறுவனத்தில் கட்டப்பட்ட புதிய இளைய கடற்படையினர் விடுதி தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜெயந்த கமகே 2021 பிப்ரவரி 24 அன்று திறந்து வைத்தார்.
நிலவும் கோவிட் 19 தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, கடற்படை தலைமையகத்தின் அறிவுறுத்தலின் படி இளைய கடற்படையினர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வீடாக கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 2020 செப்டம்பர் 26 ஆம் திகதி தொடங்கப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு ஏற்றவாறு விசாலமான இடங்கள் மற்றும் குளியலறைகளுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டது, மேலும் இலங்கை கடற்படை கப்பல் தீகாயு நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட இளைய மாலுமிகளின் தங்குமிடத்தை மேம்படுத்துவதும் இதன் ஒரு நோக்கமாகும். சிவில் பொறியியல் துறையில் இணைக்கப்பட்ட மாலுமிகளால் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முடித்த பின் பிப்ரவரி 24 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெயந்த கமகே இந்த கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
மேலும் இந் நிகழ்வுக்காக கட்டளை பொறியியல் அதிகாரி, கட்டளை சிவில் பொறியியல் அதிகாரி, கட்டளை வழங்கள் அதிகாரி மற்றும் இலங்கை கடற்படை கப்பல் தீகாயு நிறுவனத்தின் கட்டளை அதிகாரி உட்பட கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.