சுகாதார அமைச்சின் அனுசரணையிலும், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவளம் உதவியுடனும் கட்டப்பட்ட 821 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் மெல்சிரிபுர, உமந்தாவ மஹா விஹாரய ஆசிரம வளாகத்தில் இன்று (2021 பிப்ரவரி 24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் திறந்து வைக்கப்பட்டன.

">

கடற்படையால் கட்டப்பட்ட 821 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் மெல்சிரிபுர, உமந்தாவ மஹா விஹாரய பகுதியில் திறக்கப்பட்டது

சுகாதார அமைச்சின் அனுசரணையிலும், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவளம் உதவியுடனும் கட்டப்பட்ட 821 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் மெல்சிரிபுர, உமந்தாவ மஹா விஹாரய ஆசிரம வளாகத்தில் இன்று (2021 பிப்ரவரி 24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் திறந்து வைக்கப்பட்டன.

இலங்கையில் இருந்து கொடிய சிறுநீரக நோயை ஒழிப்பதற்கான தேசிய முயற்சியில் முன்னணியில் செயல்படும் இலங்கை கடற்படை மற்றொரு கட்டமாக 2020 நவம்பர் 27 அன்று 821 வது நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிக்கத் தொடங்கியது. சுகாதார அமைச்சின் தலைமையிலும், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவளம் உதவியுடனும் நிர்மானிக்கப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் உமந்தாவ மஹா விஹாரய ஆசிரமத்திற்கு வருகை தரும் பக்தர்களின் மற்றும் மடஹபொலெ கிராம மக்களின் பாதுகாப்பான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். உமந்தாவ மஹா விஹார ஆசிரமத்தின் நிறுவனர் மற்றும் தலைமைத் தேரர் பிடிதுவே சிரிதம்ம தேரரின் அழைப்பின் பேரில், குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் திறந்து வைக்கப்பட்டன. மேலும் குறித்த ஆசிரமத்தில் புதிதாக கட்டப்பட்ட ‘சீத மாலிகய’ சன்னதி அறை கடற்படைத் தளபதி அவர்களினால் மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவிட் 19 பரவாமல் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார ஆலோசனைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் உமந்தாவ மஹா விஹார ஆசிரமத்தின் நிறுவனர் மற்றும் தலைமைத் தேரர் பிடிதுவே சிரிதம்ம தேரர் உள்ளிட்ட மகா சங்க உறுப்பினர்கள் வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன, வடமேற்கு கடற்படை கட்டளையின் மூத்த அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள், வடமேற்கு மாகாண மூத்த துணை பொலிஸ் மா அதிபர் உட்பட அப்பகுதி மக்கள் கழந்து கொண்டனர்.