கடற்படையால் அம்பாரை பகுதியில் கட்டப்பட்ட நாங்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டது
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக அம்பாரை, பதியதலாவ பிரதேச செயலக பிரிவில் புதிதாக கட்டப்பட்ட நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2021 பிப்ரவரி 04 அன்று பொதுமக்களுக்காக திறந்துவைக்கப்பட்டன. குறித்த நிலையங்களுடன் சமூகத்தின் பாதுகாப்பான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மொத்தம் 817 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையால் நிறுவப்பட்டன.
சுகாதார அமைச்சின் அனுசரணையிலும், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழிலாளர் பங்களிப்பிலும், அம்பாரை மாவட்டத்தில் பதியதலாவ பிரதேச செயலக வளாகம், கொல்லேகம ராஜா மகா விஹாராய,சேரங்கட புராண ராஜமஹா விஹாரய மற்றும் மீகஸ்வத்த குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் அன்றாட குடிநீர் தேவையை சுகாதாரமான முறையில் பூர்த்தி செய்வதற்கான வசதிகள் வழங்கப்படும்.
கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வுகளில் தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கேப்டன் வழங்கள் மற்றும் சேவைகள் கேப்டன் பிரஷான் மாசோ உட்பட தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் அப் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.