73 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இணையாக இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படை கண்காட்சியொன்று 2021 பிப்ரவரி 04 அன்று காலி முகத்திடத்தில் தொடங்கியது.

">

73 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இணையாக காலி முகத்திடத்தில் கடற்படை கண்காட்சிகள்

73 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இணையாக இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படை கண்காட்சியொன்று 2021 பிப்ரவரி 04 அன்று காலி முகத்திடத்தில் தொடங்கியது.

நாட்டின் முதல் பாதுகாப்பு வளையமான இலங்கை கடற்படையின் திறன்களைக் கொண்ட ஒரு பயிற்சி இவ்வாரு காலி முகத்திடத்தில் நடைபெற உள்ளது. கடலில் இருந்து எதிரிகள் இருக்கும் பகுதிக்கு வீர்ரகளை கொண்டுவருவதற்கான சிறப்புத் திறன் உள்ள 2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மரையின் படையணியுடன் இலங்கை கடற்படையின் தரையிறங்கும் கப்பல்கள்களான சக்தி மற்றும் ரணகஜ உட்பட எல் 821, எல் 801 மற்றும் எல் 802 தரையிறங்கும் கப்பல்கள் மற்றும் தரையிறங்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் பல சிறிய படகுகள் இந்த பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்படும்.

பிப்ரவரி 04 ம் திகதி நடத்தப்பட்ட பயிற்சியின் போது, கடற்படை மரைன் படைப்பிரிவின் கடற்படையினர் ரகசியமாக எதிரி எல்லைக்குள் நுழைந்து கடற்கரையை மேற்பார்வையிடவும் எல்லை தாண்டிய நடவடிக்கையை மேற்கொள்ளவும் ஒரு உளவுப் பயிற்சியை மேற்கொண்டனர். கடற்படை பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட கடற்படை மரைன் படைகளின் மூன்று (03) முன்மாதிரி (Proto type) வாகனங்களும் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன, பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் ஒய்.என்.ஜெயரத்ன, செயல் இயக்குநர் கடற்படை மரைன் கேப்டன் சனத் பிடிகல, 1 வது கடற்படை மரையின் படைப் பிரிவின் கட்டளை அதிகாரி கொமான்டர் ரவி ஹரிச்சந்திர உட்பட கடற்படையினர் கலந்து கொண்டனர்.

நடைமுறையில் உள்ள COVID-19 சூழ்நிலை காரணமாக, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கடற்படைப் பணியாளர்களின் பங்கேற்புடன் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டது மற்றும் நிகழ்வின் பிரத்யேக சிறப்பம்சங்களை ஊடகங்கள் மூலம் மக்கள் பார்வைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், இந்த நிகழ்வுகள் பிப்ரவரி 06 மற்றும் 07 திகதிகளிலும் கொழும்பு காலி முகத்திலில் நடைபெற உள்ளது.