காலமான மிகவும் வணக்கத்திற்குரிய டென்மார்க்கில் ஞானதீப தேரரின் அஸ்தி வைக்கப்பட்ட தாது கோபுரம் புத்த பக்தர்களின் வழிபாட்டிற்காக பூஜை செய்யப்பட்டது
காலமான மிகவும் வணக்கத்திற்குரிய டென்மார்க்கில் ஞானதீப தேரரின் அஸ்தி வைத்து மீகலேவ எத்தலகல ஆரண்ய சேனாசனத்தில் கடற்படையினரால் கட்டப்பட்ட தாது கோபுரம் இன்று (2020 டிசம்பர் 26) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் புத்த பக்தர்களின் வழிபாட்டிற்காக பூஜை செய்யப்பட்டது.
அனுராதபுரம் மீகலேவ எத்தலகல ஆரண்ய சேனாசனத்தில் வாழ்ந்து 2020 செப்டம்பர் 12 அன்று காலமான டென்மார்க்கில் ஞானதீப தேரரின் அஸ்தி வைப்பதுக்காக குடாகத்னோருவ வேதேனிகம எத்தலகல ஆரண்ய சேனாசனாதிபதி புனித கரன்தெனியே ஞானவீர தேரர் மற்றும் புனித கஹத்தேவெல சுகதவன்ச தேரரின் ஆலோசனைகளின் கீழ் புனித அலவுவே அனோமதச்சி தேரரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த தாது கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் 2020 அக்டோபர் 23 அன்று கடற்படையினரால் தொடங்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த இந்த தாது கோபுரத்தில் காலமான மிகவும் வணக்கத்திற்குரிய டென்மார்க்கில் ஞானதீப தேரரின் அஸ்தி வைத்து மகா சங்கத் தேரர்களின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடற்படை தளபதிளால் புத்த பக்தர்களின் வழிபாட்டிற்காக பூஜை செய்யப்பட்டது.
கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்ன, வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் மூத்த அதிகாரிகள் ஒரு குழு கலந்து கொண்டனர்.




















