இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு களனி ரஜமஹா விஹாராயத்தில் ‘தாது மந்திர பூஜை’
இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவுக்கு இனையாக மேற்கொள்ளப்படுகின்ற மத நிகழ்ச்சிகளின் மற்றொரு நிகழ்ச்சி 2020 டிசம்பர் 24 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமையில் களனி ரஜமஹா விஹாராயத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு நிகழ்வுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கழந்து கொண்டார்.
2020 டிசம்பர் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்ற தொடர் மத நிகழ்ச்சிகளின், கஞ்சுக பூஜை மற்றும் கடற்படை கொடிகள் ஆசீர்வாதிக்கும் பூஜை கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் ருவன்வெலி மகா சேய அருகில் மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி அருகில் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி கண்டி தலதா மாலிகை முன் புத்த பூஜை நடைபெற்றதுடன் 09 ஆம் திகதி தானம் வழங்கும் விழா நடைபெற்றது. அதன் படி கடற்படைத் தளபதியின் தலைமையில் டிசம்பர் 24 ஆம் திகதி களனி ராஜமஹா விஹாரயவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தாது மந்திர பூஜை’ பக்தியுடன் நடைபெற்றது.
இந்த சிறப்பான நிகழ்வில் கடற்படையின் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் கபில சமரவீர, கடற்படை துணை தலைமை பணியாளர் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, கடற்படை தலைமையகத்தின் மற்றும் மேற்கு கடற்படை கட்டளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட குழு கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.