இலங்கை கடற்படையின் முதல் மறைந்திருந்து துப்பாக்கி சுடும் போட்டி திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை கடற்படையால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்திருந்து துப்பாக்கி சுடும் போட்டி (Naval Sniper Firing Competition) 2020 டிசம்பர் 14 அன்று முதல் திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் நடைபெற்றதுடன் பரிசு வழங்கும் விழா கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவான் பெரேரா தலைமையில் 2020 டிசம்பர் 20 அன்று இடம்பெற்றது.
கடற்படையின் மறைந்திருந்து துப்பாக்கி சுடும் வீரர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2020 டிசம்பர் 14 முதல் ஆறு (06) நாட்கள் திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் மற்றும் கடல் பகுதிகளில் நடைபெற்ற இந்த போட்டிக்கு கடற்படை காலாட்படை, சிறப்பு படகு படை மற்றும் மரையின் பிரிவின் மறைந்திருந்து துப்பாக்கி சுடும் பாடநெறிக்கு தேர்வு செய்யப்பட்ட கடற்படையினர்கள் ஒரு குழு கலந்து கொண்டனர். சிறப்பு படகு படை மற்றும் மரையின் பிரிவு மூலம் மேற்கொள்ளப்படுகின்ற கப்பல்களுக்கான அணுகல், சோதனை செய்தல் மற்றும் கைது செய்தல் போன்ற சிறிய குழு நடவடிக்கைகளில் நம்பிக்கையை வளர்ப்பதையும், நகர்ப்புறங்களில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நம்பிக்கையை வளர்ப்பதையும் இந்த போட்டித்தொடரின் நோக்கமானது.
போட்டியின் அனைத்து நிகழ்வுகளிலிருந்தும் அதிக மதிப்பெண்களைப் பெற்று லெப்டினன்ட் கமாண்டர் (மரைன்) பி.கே.எஸ் மஹிந்த சாம்பியன்ஷிப்பை வென்றார், சிறந்த துப்பாக்கி சுடும் அணியாக கடற்படை வீரர் டி.ஜி.என்.எஸ் குமார மற்றும் கேப்டன் எச்.ஆர்.பி.ஜே.எஸ் ரத்நாயக்க சாம்பியன்ஷிப்பை வென்றனர். இந்த விருது வழங்கும் விழாவில் சிறப்பு படகு படை பிரிவின் கட்டளை அதிகாரி கேப்டன் துசித தமிந்த உட்பட சிறப்பு படகு பிரிவின் பயிற்சி ஊழியர்கள் மற்றும் பல கடற்படையினர் கலந்து கொண்டனர்.