பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 14 வது பாடத்திட்டத்தில் கடற்படைத் தளபதி உரையாற்றினார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2020 டிசம்பர் 07) சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 14 வது பாடத்திட்டத்தில் உரையாற்றினார்.
சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல், டி.ஏ.பி.என் தெமதன்பிடியவின் அழைப்பின் பேரில், பணியாளர் கல்லூரியின் 14 வது பாடத்திட்டத்தில் உரையாற்ற வருகைதந்த கடற்படைத் தளபதி அவர்களை பணியாளர் கல்லூரியின் தளபதியால் வரவேற்கப்பட்டு “மெரூன்” மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் அவர் பணியாளர் கல்லூரியின் பதினான்காம் (14 வது) பாடநெறிக்கு கடற்படைத் தளபதியை அறிமுகப்படுத்தினார்..
கடற்படை தளபதி, சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பதினான்காம் (14 வது) பாடநெறியில் ‘இலங்கைக்கு வலுவான கடற்படை இருக்க வேண்டிய அவசியம்’ குறித்து உரையாற்றினார். இந் நிகழ்வுக்காக சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் துனை தளபதி பிரிகேடியர் யு.டி.விஜேசேகர, பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, பிரிகேடியர் எச்.எம்.எல்.டி ஹேரத், தலைமை பயிற்றுவிப்பாளர் (இராணுவம்), பிரிகேடியர் யு.கே.எல்.எஸ் பெரேரா. கடற்படையின் தலைமை பயிற்றுவிப்பாளர், கொமடோர் என்.பி.டபிள்யூ அமரதாச, விமானப்படையின் தலைமை பயிற்றுவிப்பாளர், விமானம் கொமடோர் பி.ரணசிங்க உட்பட கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்கள் மற்றும் பதினான்காம் (14 வது) பாடநெறியின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்காக வழங்கப்பட்ட சுகாதார ஆலோசனைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது, மேலும் சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் தளபதி, மேஜர் ஜெனரல், டி.ஏ.பி.என் தேமதன்பிட்டிய மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இடையே நினைவு பரிசுகள் பரிமாறப்பட்டன.