கடற்படை மரைன் படைப்பிரிவில் பயிற்சி பெற்ற 54 கடற்படை வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு
இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவில் இணைக்கப்பட்டு அடிப்படை தகுதி பாடநெறியை வெற்றிகரமாக முடித்த நான்கு (04) அதிகாரிகள் மற்றும் ஐம்பது (50) மாலுமிகள் 2020 நவம்பர் 24 ஆம் திகதி திருகோணமலை சம்பூரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தில் வெளியேறினர்.
சாம்பூரில் உள்ள மரைன் பயிற்சி பாடசாலையில் எட்டு மாதங்களாக இடம்பெற்ற இந்த ஆறாவது அடிப்படை மரைன் தகுதி பாடநெறியின் பட்டமளிப்பு மற்றும் சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட அனைத்து சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட இந்த பட்டமளிப்பு மற்றும் சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வுக்காக இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தில் தளபதி கேப்டன் கே.ஜி.என்.ரணவீர, முதலாம் மரைன் படைப்பிரிவில் கட்டளை அதிகாரி கொமான்டர் ஹரிஸ்சந்திர, கிழக்கு கடற்படை கட்டளையின் மரையின் பயிற்சி கடற்படையினர் உட்பட குறைந்த எண்ணிக்கையிலான அதிகாரிகள், வீர்ர்கள் கலந்து கொண்டனர்.