நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக விலைமதிப்பற்ற சேவையின் பின்னர் தர இறக்கம் செய்யப்பட்ட இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'வீரயா' மற்றும் 'ஜகத்தா' ஆகிய இரு கப்பல்கள் 2020 அக்டோபர் 22 மற்றும் 26 ஆம் திகதிகளில் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனினங்கள் இனப்பெருக்கம் செய்யும் தளமாக பயன்படுத்தும் வகையில் திருகோணமலை கடலுக்கு அடியில் மூழ்கடிப்புச் செய்யப்பட்டது.

">

தர இறக்கம் செய்யப்பட்ட கடற்படையின் இரண்டு கப்பல்களும் திருகோணமலை கடலுக்கடியில் மூழ்கடிப்பு

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக விலைமதிப்பற்ற சேவையின் பின்னர் தர இறக்கம் செய்யப்பட்ட இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'வீரயா' மற்றும் 'ஜகத்தா' ஆகிய இரு கப்பல்கள் 2020 அக்டோபர் 22 மற்றும் 26 ஆம் திகதிகளில் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனினங்கள் இனப்பெருக்கம் செய்யும் தளமாக பயன்படுத்தும் வகையில் திருகோணமலை கடலுக்கு அடியில் மூழ்கடிப்புச் செய்யப்பட்டது.

ශஇலங்கை கடற்படையின் மூன்றாவது வேக ரோந்து படகுகள் படையின் இலங்கை கடற்படை கப்பல் 'வீரயா' மற்றும் 'ஜகதா' ஆகிய இரண்டு கப்பல்களுக்கு கடற்படை பாரம்பரியமாக மரியாதை செலுத்தி கடற்படை சேவையில் இருந்து அகற்றும் விழா கடந்த 2020 அக்டோபர் 12 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் நடைபெற்றது. குறித்த கப்பல்களில் காணப்பட்ட மீள பயன்படுத்தக்கூடிய பாகங்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதுடன் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எந்த ஒரு நச்சுத்தன்மையான உபகரணங்கள் அவற்றில் இல்லை எனவும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி, 'வீரயா' என்று அழைக்கப்படும் பி 311, 2020 அக்டோபர் 22, அன்று திருகோணமலையில் 'ராக்கி பாயிண்ட்' (Rocky Point) மற்றும் 'சாண்டி பே' (Sandy Bay) கடற்கரை இடையில் கடலில் முழ்கடிக்கப்பட்டதுடன் இதுக்கு அருகில் அக்டோபர் 26 அன்று 'ஜகதா' என்று அழைக்கப்படும் பி 315 கப்பலும் மூழ்கடிக்கப்பட்டது .இலங்கையில் சாண்டி குடாவில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது நீருக்கடி அருங்காட்சியகத்தின் வடகிழக்காக சுமார் 25 மீட்டர் தூரத்தில் குறித்த இரு கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டு உள்ளன. இதனால் ஏற்கனவே நீருக்கடியில் அருங்காட்சியகத்தில் உருவாக்கப்பட்ட மீன் இனப்பெருக்கத்திற்கான சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த போரின் போது கிழக்குக் கடலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கைவிடப்பட்ட வே லிங் கப்பல் A522 என்று பயன்படுத்தி 2018 ஆம் ஆண்டில் நீர்னொழும்புவிலிருந்து மேற்கு கடலில் இதேபோன்ற மீனினங்களின் இனப்பெருக்கத் தளமொன்றை உருவாக்க முழ்கடிக்கப்பட்டது.

இவ்வாறு கடலில் மூழ்கிய அல்லது மூழ்கடிக்கப்பட்ட கப்பல்கள் மீனினங்களின் பிரதான இனப்பெருக்கத் தளங்களாகவும் அவற்றில் காணப்படும் உலோகத் திட்டுக்கள் கடல் வாழ் உயிரினங்களை ஈர்க்கும் ஒரு காரணி எனவும் கண்டறியப்பட்டுள்ளது. சாண்டி குடாவின் கடற்கரையில் இருந்து இடம்பெற்றுள்ள இந்த புதிய கடல் சுற்றுச்சூழல், எதிர்காலத்தில் அதிக பொருளாதார நலன்களை கவர்ந்திழுக்க ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும் என கடற்படை நம்புகிறது.


වීරයා


ඡගතා