அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் மிஹிந்தலை புனிதப் பகுதியில் புனரமைப்பு பணிகள் தொடங்கிய விழாவில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்.
அனுராதபுரம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிஹிந்தலை ராஜமஹா விகாரையில் உள்ள மிஹிந்து மகா சேயா, மிஹிந்து குகை மடாலயம் மற்றும் புனித ஆலயத்தின் புனரமைப்பு பணிகளை 2020 அக்டோபர் 24 ஆம் திகதி மதியம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கழந்து கொன்டார்.
மிகவும் மரியாதைக்குரிய கிரிபத்கொடை ஞானாநந்த தேரர் உட்பட மஹாமெவ்னா தியான மடாலயத்தின் பிற உறுப்பினர்களின் பங்களிப்புடன் இந்த கட்டமைப்புகளின் புனரமைப்பு பணிகள் நடத்தப்படும். இதற்கிடையில், மிஹிந்து மகா சேயாவின் புனரமைப்புக்கு இலங்கை கடற்படை தனது மனிதவளத்தை செயல்படுத்துகிறது, மேலும் அந்த மறுசீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்க கடற்படை திட்டமிட்டுள்ளது.
இந் நிகழ்வுக்காக வரலாற்று சிறப்புமிக்க மிஹிந்தலை ராஜமஹா விகாரையில் தலைமை பதவியில் உள்ள தேரர் புனித வலவாஹங்குனவெவே தம்மரதன தேரர் உட்பட மகா சங்க உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் பலர் கலந்து கொண்டனர்.