நாட்டிற்காக போராடி உயிரைத் தியாகம் செய்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன மற்றும் அப்போது வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹ, உள்ளிட்ட போர் வீரர்களுக்கு 2020 செப்டம்பர் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் அராலி பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுச்சின்னம் அருகில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மலர் அஞ்சலி செலுத்தினார்.

">

அராலியில் நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்த போர்வீரர்களுக்கு கடற்படைத் தளபதி மலர் அஞ்சலி செலுத்தினார்

நாட்டிற்காக போராடி உயிரைத் தியாகம் செய்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன மற்றும் அப்போது வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹ, உள்ளிட்ட போர் வீரர்களுக்கு 2020 செப்டம்பர் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் அராலி பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுச்சின்னம் அருகில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மலர் அஞ்சலி செலுத்தினார்.

இலங்கை இராணுவத்தின் சிறந்த போர்வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் இராணுவ வீரர்கள் குழு 1992 ஆகஸ்ட் 08 ஆம் திகதி ஜீப் வண்டிபில் பயணம் செய்தபோது அராலி பகுதியில் எல்.டி.டி.இ பயங்கரவாதிகள் குறித்த ஜீப் வண்டியை குறிவைத்து வைக்கப்பட்ட அதிக சக்தி வாய்ந்த குண்டொன்று வெடித்து லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹ, லெப்டினன்ட் கேர்ணல் எச்.ஆர். ஸ்டீவன், லெப்டினன்ட் கேர்ணல் ஜீ.எச் ஆரியரத்ன, லெப்டினன்ட் கேர்ணல் வய்.என் பலீபான, லெப்டினன்ட் கேர்ணல் நலீன் த அல்விஸ், லெப்டினன்ட் கொமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கொமாண்டர், சந்திம விஜயபுர மற்றும் சாதாரன வீர்ர் டப். ஜி விக்கிரமசிங்க ஆகிய மிகச் சிறந்த 10 வீராங்கனைகள் இறந்தனர்.

நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆராலி பகுதியில் நிறுவப்பட்டுள்ள நினைவுச்சின்னத்திற்கு வருகை தந்த கடற்படைத் தளபதி போர்வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி உட்பட வடக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.