MT New Diamond’ கப்பலில் காயமடைந்த மாலுமியை காப்பாற்றிய கடற்படை வீரர்கள் பாராட்டப்பட்டனர்
கடந்த செப்டம்பர் 03 ஆம் திகதி இலங்கைக்கு கிழக்குக் கடலில் NEW DIAMOND என்ற கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் பலத்த காயமடைந்த கப்பலின் மூன்றாவது பொறியாளரின் உயிரைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பங்குபெற்ற கடற்படை வீரர்களின் செயலைப் பாராட்டும் வகையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் வைத்து அவர்களுக்கு பாராட்டு கடிதங்களை வழங்கினார்.
என்ஜின் அறையில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ பிடித்த இந்த கச்சா எண்ணெய் கப்பலில் இருந்த ஊழியர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக கடலோர தேசமாக இலங்கையின் சர்வதேச அர்ப்பணிப்பை நிறைவேற்றுவதற்கு கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை கடற்படை கப்பல் ரணரிசி நிருத்தப்பட்டது.
அதன்படி, பலத்த காயமடைந்த கப்பலின் மூன்றாவது பொறியாளரின் உயிரைக் காப்பாற்றும் நடவடிக்கையை திட்டமிட்ட ரணரிசி கப்பலின் கட்டளை அதிகாரி கொமாண்டர் கே.ஆர்.ஜி.ஆர்.எஸ் ரன்தென்னவுக்கும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருந்தாலும் எரியும் கப்பலுக்குள் நுழைந்து, கப்பலின் மேல்தளத்தில் பலத்த காயத்துடன் இருந்த கப்பலின் மூன்றாவது பொறியாளரை ரணரிசி கப்பலுக்கு அழைத்து வர முன்வந்த லெப்டினன்ட் கே.ஜி.ஏ.எஸ்.எம் விஜேரத்ன, கடற்படை வீரர் டீ.எல்.கே முதியன்சே மற்றும் டப்.ஜி.ஜி.யு சேனாரத்ன ஆகியோருக்கும் இவ்வாரு கடற்படைத் தளபதி பாராட்டு கடிதங்களை வழங்கினார்.
மேலும், இந்த கடற்படை பணியாளர்களால் காட்சிப்படுத்தப்பட்ட தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை ஆகியவை மற்ற கடற்படை வீரர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்.