கடற்படைப் பணியாளர்களை தொற்று அல்லாத நோய்களிலிருந்து பாதுகாத்தல் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் கடற்படைத் தலைமையகத்தின் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் 2020 செப்டம்பர் 16 ஆம் திகதி ஒரு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

">

தொற்று அல்லாத நோய்களிலிருந்து கடற்படை வீரர்களைப் பாதுகாப்பது குறித்த பயிற்சி பட்டறை

கடற்படைப் பணியாளர்களை தொற்று அல்லாத நோய்களிலிருந்து பாதுகாத்தல் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் கடற்படைத் தலைமையகத்தின் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் 2020 செப்டம்பர் 16 ஆம் திகதி ஒரு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க கட்டளை மட்டத்தில் இந்த பயிற்சி திட்டம் நடத்த ஒரு கட்டளையில் இருந்து 10 மாலுமிகள் சேர்க்கப்பட்டது. அதன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட 70 மாலுமிகள் இந்த திட்டத்தில் பங்கேற்றனர். சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் இலங்கை மருத்துவ ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவர் டாக்டர் ரேணுகா ஜெயதிஸ்ஸ உள்ளிட்ட மூத்த மருத்துவர்கள் குழு பங்கேற்புடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த திட்டம் கடற்படையினர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ச்சியான விரிவுரைகள் மற்றும் குழு நடவடிக்கைகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டது. மேலும் குழு பயிற்சி மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த பட்டறை, எதிர்காலத்தில் கடற்படை கட்டளை மட்டத்தில் அனைத்து கடற்படையினர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்த எதிர்பார்க்கப்படுகிறது.