கடற்படைத் தளபதி கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இலங்கை கடற்படையின் 24 வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக 2020 செப்டம்பர் 10 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது, கடற்படை தளபதி, கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில், கிழக்கு கடற்படை கட்டளையின் கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் பிரிவுகளை ஆய்வு செய்தார். மேலும், கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை பணியாளர்களை உரையாற்றிய கடற்படைத் தளபதி, பிரிவுகளை முறையாக பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை மற்றும் கடற்படை வீரர்கள் பல்வேறு வகையான போதைப்பொருட்களுக்கு அடிமையாகக்கூடாது என்பதை வலியுறுத்தினார். கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதில் கிழக்கு கடற்படை கட்டளை வழங்கிய ஒத்துழைப்புக்கும் கடற்படைத் தளபதி நன்றி தெரிவித்தார்.
கிழக்கு கடற்படை கட்டளையின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து கட்டளை தலைமையகத்தில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி உள்ளிட்ட துறைத் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் கடற்படைத் தளபதி கடற்படை கப்பல்துறை வளாகத்தில் கட்டுமானத் திட்டங்களை ஆய்வு செய்தார். அதன் பின் 4 வது துரித தாக்குதல் படை பிரிவின் விரிவாக்கப்பட்ட நிர்வாகக் கட்டடத்தையும் திறந்து வைத்த கடற்படைத் தளபதி கொமடோர் அதிகாரி கப்பல்துறை (கிழக்கு) மூலம் 03 வது வெளியீடு வழியில் புதுப்பிக்கப்பட்ட பி 491 துரித தாக்குதல் படகை முதல் முறையாக ஏவப்படுத்தினார். 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் 4 வது துரித தாக்குதல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய தற்போதைய கடற்படைத் தளபதி, குறித்த படை பிரிவின் முதல் பயிற்சி அதிகாரியும் ஆவார். மேலும், புதுப்பிக்கப்பட்ட பி 491 வேகப் படகின் திசைமாற்றி கட்டுப்பாட்டு அமைப்பு (Steering control system) கிழக்கு கடற்படை கட்டளை மின் கண்டுபிடிப்பு மையத்தால் வடிவமைக்கப்பட்டது. கடற்படைத் தளபதி மின் புதிய வடிவமைப்பு மையத்தின் தற்போதைய திட்டங்களை ஆய்வு செய்து குறித்த மையத்தால் மேற்கொள்ளப்படுகின்ற சோதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து தேவையான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மெலும், கப்பல்துறைக்கு மெற்கொண்டுள்ள விஜயத்தின் போது, கடற்படைத் தளபதி கடற்படை கப்பல்துறையில் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து சிறப்பு கவனம் செலுத்தியதுடன், கடற்படையினர்களுக்கு உயர்தர தங்குமிடம் வழங்குவது மற்றும் உயர்மட்ட பணி சூழலை உருவாக்குவது குறித்து கட்டளை தளபதி மற்றும் துறைத் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த விஜயத்துக்காக கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் துணைத் தளபதி உட்பட ஏராளமான மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.