கடற்படை தளபதி இந்திய கடலோர காவல்படையின் அமேயா கப்பலை (ICGS AMEYA) பார்வையிட்டார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2020 செப்டம்பர் 10) திருகோணமலையில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான அமேயா (ICGS AMEYA) கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டன்ட் ஏ.கே பாண்டேவை சந்தித்து எம்டி நியூ டயமண்ட் கப்பலின் பேரழிவு நிலைமையை நிர்வகிப்பதில் வழங்கிய சிறந்த உதவிக்கு இந்திய கடலோர காவல்படைக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
இலங்கைக்கு கிழக்கு கடல் பகுதியில் பாதிக்கப்பட்ட 'நியூ டயமண்ட்' கச்சா எண்ணெய் கப்பலின் தீயணைப்பு நடவடிக்கைகளின் போது இந்திய கடலோர காவல்படை வழங்கிய பாராட்டத்தக்க பங்களிப்பை பாராட்டிய கடற்படைத் தளபதி அதே வேளையில் அமேயா (ICGS AMEYA) கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் கப்பலின் குழுவினருக்கும் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் கட்டுப்படுத்தப்பட்ட தீ சீரற்ற வானிலை காரணமாக செப்டம்பர் 7 ஆம் திகதி மீண்டும் ஏற்பட்டுள்ளது. இத்த சூழ்நிலையை கடற்படைத் தளபதி இந்திய கடலோரக் காவல்படை பணிப்பாளர் நாயகத்திடம் தெரிவித்தவுடன் உலர் இராசாயன பவுடர் மற்றும் தீயை அணைக்கும் DCP இராசாயன பொருட்கள் கொண்ட இந்திய கடலோர காவல்படையினர் விரைந்து வந்தனர். குறித்த செயலை கடற்படை தளபதி மிகவும் பாராட்டினார்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினரும் நினைவு சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.