கடற்படையினரால் அம்பார மாவட்டத்தில் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது
கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக அம்பார மாவட்டத்தில் மஹஓயா புலாவல மஹா விஹாரயவில் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 2020 செப்டம்பர் 07 அன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
அதன்படி, இப்பகுதியில் வசிப்பவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக சுகாதார அமைச்சகம், கடற்படையின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் திறமையான மனிதவளம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நிறுவப்பட்டுள்ள இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் நன்மையடைய உள்ளனர்.
இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கட்டளை பொறியியல் அதிகாரி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மஹஓய புலாவல மஹா விஹாரயவின் மத பிரமுகர்கள், மஹஓய பிரதேச செயலாளர், கடற்படையின் அதிகாரிகள், மாலுமிகள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் கலந்து கொண்டனர்.