யாழ்ப்பாண தீபகற்பத்தில் உயர்தர வகுப்புகளில் படிக்கும் 161 மாணவர்களுக்காக 2020 ஆகஸ்ட் 30 அன்று வட கடலில் கடல் சுற்று பயணமொன்று கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

">

யாழ்ப்பாண தீபகற்பத்தில் பாடசாலை மாணவர்களுக்காக கடல் சுற்று பயணமொன்று கடற்படை ஏற்பாடு செய்துள்ளது

யாழ்ப்பாண தீபகற்பத்தில் உயர்தர வகுப்புகளில் படிக்கும் 161 மாணவர்களுக்காக 2020 ஆகஸ்ட் 30 அன்று வட கடலில் கடல் சுற்று பயணமொன்று கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

கடற்படையின் திமிங்கல கண்காணிப்பு திட்டத்துக்காக பயன்படுத்தப்படும் A543 என்ற கப்பலில் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர், இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மேலும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகள் மூலம் கடல் சூழலுக்கு ஏற்படும் அழிவு குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த சிறப்பு சந்தர்ப்பம் மாணவர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக மாறியதுடன், இலங்கை பிரதேசத்தின் கடல் வளங்கள் மற்றும் அந்த வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் இது மூலம் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.