அம்பாரை, பொத்துவில் முஹுது மஹா விஹாரயவுக்கு வருகை தரும் பக்தர்களின் தங்குமிடத்திற்காக கடற்படையினரால் விரைவாக கட்டி முடிக்கப்பட்ட புதிய இரண்டு மாடி யாத்திரை மண்டபம் 2020 ஆகஸ்ட் 15 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது

">

கடற்படையினரால் விரைவாக கட்டி முடிக்கப்பட்ட முஹுது மஹா விஹாராயைவின் இரண்டு மாடி யாத்திரை மண்டபம் திறந்து வைக்கப்பட்டது

அம்பாரை, பொத்துவில் முஹுது மஹா விஹாரயவுக்கு வருகை தரும் பக்தர்களின் தங்குமிடத்திற்காக கடற்படையினரால் விரைவாக கட்டி முடிக்கப்பட்ட புதிய இரண்டு மாடி யாத்திரை மண்டபம் 2020 ஆகஸ்ட் 15 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அறிவுறுத்தலின் பேரில், தென்கிழக்கு கடற்படை கட்டளை தளபதியின் மேற்பார்வையின் கீழ், கடற்படை சமூகப் பொறுப்பின் மற்றொரு திட்டமாக கட்டுமானப் பணிகள் குறுகிய காலத்தில் நிறைவடைந்த இந்த யாத்திரை மண்டபத்தின் அனைத்து மின் சுற்றுகளையும் நிறுவுதல் கடற்படையால் மேற்கொள்ளப்பட்டது. கடற்படை வழங்கிய இந்த சமூக சேவைக்காக விஹாரயவின் தலைமை தேரர் உட்பட அப் பகுதி மக்கள் கடற்படைத் தளபதி மற்றும் கடற்படைக்கு தங்களுடைய நன்றியைத் தெரிவித்தனர்.

ருஹுனு கதிர்காமம் மஹா தேவலயத்தின் பஸ்நாயக்க நிலமே, தில்ருவன் ராஜபக்ஷ அவர்களினால் இந்த யாத்திரை மண்டபத்தை திறந்து வைக்கப்பட்டதுடன் இந் நிகழ்வுக்காக தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி உட்பட கடற்படை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டனர்.