இந்திய கடற்படைத் தளபதி கடற்படைத் தளபதி நிஷாந்த உலுக்கேதென்னவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்

இன்று (ஜூலை 24, 2020) ஒரு தொலைபேசி உரையாடலின் போது இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டதற்காக வைஸ் அட்மிரல் நிஷாந்தா உலுக்கேதென்னவை வாழ்த்தியுள்ளார்.

மேலும், இந்திய கடற்படைத் தளபத, இரண்டு கடற்படைகளுக்கிடையிலான உறவு தொடர்ந்து வலுவாக வளரும் என்றும், இலங்கை கடற்படையின் திறன்களை வலுப்படுத்த எந்தவொரு உதவியையும் வழங்க இந்திய கடற்படை தயாராக உள்ளது என்றும் மீண்டும் வலியுறுத்தினார். இலங்கை கடற்படை இந்திய கடற்படையுடன் நீண்டகால உறவைக் கொண்டுள்ளது, மேலும் இரு கடற்படைகளும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பிற்கான பங்குதாரர்களாக நலன்களைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

இந்திய கடற்படைத் தளபதியின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட வைஸ் அட்மிரல் நிஷாந் உலுக்கேதென்னவுக்கு பல ஆண்டுகளாக இலங்கை கடற்ப்டை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பயிற்சி வாய்ப்புகளை வழங்கிய இந்திய கடற்படைக்கு தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். மேலும், அட்மிரல் சிங் தனது திறமையான தலைமையின் கீழ் இலங்கை கடற்படையின் எதிர்கால முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல அட்மிரல் நிஷாந்த உலுக்கேதென்னவுக்கு இந்திய கடற்படைத் தளபதி வாழ்த்தினார்.