கேரள கஞ்சா கொண்ட சந்தேக நபரை கைது செய்ய கடற்படை உதவி
இலங்கை கடற்படை மற்றும் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 ஜூலை 22 அன்று குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
நாட்டில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் மற்றொரு நடவடிக்கை 2020 ஜூலை 22 அன்று குடாவெல்ல மீன்வளத் துறைமுகத்தில் தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் பட்டிபொல சிறப்பு பணிக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒருவரை பரிசோதனை செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து சுமார் 100 கிராம் கேரளா கஞ்சா மற்றும் சிறிய அளவுகோல் ஒன்றை கண்டுபிடிக்கப்பட்டன. அதன் படி சந்தேகத்திற்கிடமான நபர் கேரள கஞ்சா மற்றும் சிறிய அளவுகோலுடன் கைது செய்யப்பட்டார்.
இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திஸ்ஸமஹராம பகுதியில் வசிக்கும் 29 வயதானவர் என அடையாளம் காணப்பட்டார்.மேலும் மேலதிக விசாரணைகளுக்காக கேரள கஞ்சா, சிறிய அளவுகோல் மற்றும் சந்தேக நபர் தங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.