கடற்படையின் புதிய தளபதி மல்வத்து அத்தியாயத்தின் பிரதான சங்க தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படைத் தளபதியாக பதவியேற்ற பின்னர் 2020 ஜூலை 22 அன்று கண்டியில் உள்ள மால்வத்து மகா விஹாரயவுக்குச் சென்று பிரதான சங்க தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார். இந்த நிகழ்வில் கடற்படை தளபதியின் அன்பு மனைவியான கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சந்திமா உலுகேதேன்னவும் கலந்து கொண்டார்.
மல்வத்து மஹா விகாரை அத்தியாயத்தின் தலைமைத் தலைவரான கண்டி, உபோஷித புஷ்பராம விஹாரயவின் மிகவும் வணக்கத்திற்குரிய திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த தேரர், கடற்படையின் புதிய தளபதியை ஆசீர்வாதித்தார் மற்றும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கடற்படை மேற்கொள்ளும் செயல்பாடுகளை பாராட்டினார்.
இதனையடுத்து, கடற்படைத் தளபதி மல்வத்து அத்தியாயத்தின் அனுனாயக்கை மிகவும் வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார் ஆசீர்வாதங்களை பெற்ற கடற்படைத் தளபதிக்கு ஆலோசனையை வழங்கிய அனுநாயக்க தேரர், புலிகளின் மிதக்கும் ஆயுதங்களை அழிப்பதன் மூலம் 30 ஆண்டுகால அழிவுகரமான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் கடற்படை பங்களித்தமைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்புக்கான முதல் வரிசையாக ஒரு உன்னத சேவையை வழங்க அனுநாயக்க தேரர் கடற்படைக்கு ஆசீர்வாதங்களை வழங்கினார்.
மேலும் இந் நிகழ்வில் மல்வத்து அத்தியாயத்தின் துணைத் தலைவர் மிகவும் வணக்கத்திற்குரிய நியங்கொட தர்ம கீர்த்தி தேரர் கடற்படைத் தளபதியை தனது எதிர்கால கடமைகளின் வெற்றிக்காக ஆசீர்வதித்தார்.