கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், 750 வது நீர் சுத்திகரிப்பு மையம் நிகவரடியவில் உள்ள சியாம்பலாவ கிராமத்தில் இன்று (ஜூலை 13, 2020) திறக்கப்பட்டது.
சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சகத்தின் அனுசரணையின் கீழ் கடற்படை சமூக மிஷன் திட்ட நிதியத்தின் நிதி உதவியுடனும், அப்பகுதியின் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்க கடற்படையின் நிதி உதவியுடனும் நீர் வழங்கலுக்கான சியம்பலாவில் நிறுவப்பட்டது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று (ஜூலை 13, 2020) இணைய தொழில்நுட்பத்தின் மூலம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார், இது அப்பகுதி மக்கள் தங்கள் அன்றாட குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் என நம்ப்பப்படுகிறது.
மேலும், இலங்கையில் கொடிய சிறுநீரக நோயை ஒழிப்பதற்கான தேசிய பணியின் ஒரு பகுதியாக இருக்கும் கடற்படை, மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இதுபோன்ற நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை தொடர்ந்து நிறுவும்.