சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நபர் கடற்படையினரால் கைது
2020 ஜூலை 12 ஆம் திகதி ஆருகம்பேயில் உள்ள கலபுகட்டுவ களப்பு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு நபர் கடற்படையால் கைது செய்யப்பட்டார்.
கடல் வளங்களை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக மீன்பிடித்தல் வழிகளைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை தொடர்ந்து ரோந்துப் பணிகளை நடத்துகிறது. தென்கிழக்கு கடற்படைக் கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு நடத்திய இதுபோன்ற ரோந்து நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்த சந்தேக நபர், ஆருகம்பேயில் உள்ள கலபுகட்டுவ தடாகம் பகுதியில் கைது செய்யப்பட்டார். தடைசெய்யப்பட்ட வலை, மற்றும் 08 கிலோ மீன் ஆகியவை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் 61 வயதான அதே பகுதியில் வசிப்பவர் என அடையாலம் காணப்பட்டுள்ளார் . கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொத்துவில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.