சட்டவிரோத போதைப்பொருட்களுடன் சந்தேக நபரை கைது செய்ய கடற்படை உதவி

2020 ஜூலை 12 ஆம் திகதி வனாதவில்லுவ பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது சட்டவிரோத போதைப்பொருட்களைக் கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் நாடு முழுவதும் அதன் கடத்தலைத் தடுக்க இலங்கை கடற்படை அடிக்கடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வனாதவில்லுவ பகுதியில் இதுபோன்ற ஒரு நடவடிக்கையின் போது, வனாதவில்லுவ காவல்துறையினரின் ஒருங்கிணைப்புடன் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் ஒரு குழு சந்தேகத்திற்கிடமான மோட்டார் பைக்கை சோதனை செய்த போது, 2.10 கிராம் ஹெராயின் மற்றும் 18.5 கிராம் கேரளா கஞ்சா ஆகியவை அவர் வசம் இருந்தன. அதன்படி, ஹெராயின், கேரள கஞ்சா மற்றும் மோட்டார் பைக்குமடன் அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் 29 வயதான அதே பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர், கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் பைக் குறித்து மேலதிக விசாரணைகள் வனாதவில்லுவ காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகின்றனர.