கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது
கடற்படை மற்றும் காவல்துறை கூட்டு நடவடிக்கையில் 2020 ஜூலை 9 ஆம் திகதி கின்னியா பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்தனர்.
அதன்படி, கின்னியா பொலிஸுடன் ஒருங்கிணைந்து கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு, கின்னியா பகுதியில் உள்ள தஃபிக் மைதானத்திற்கு அருகில் சாலையில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு சந்தேக நபரை சோதனை செய்த போது, 30 கிராம் கேரள கஞ்சாவை அவர் வசம் காணப்பட்டதுடன் இவை விற்பனைக்கு தயாராக இருந்தது.
சாம்பூர் பகுதியில் தற்காலிகமாக வசித்து வரும் யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுடிதீவில் 42 வயதான நிரந்தர குடியிருப்பாளராக சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் மற்றும் கேரள கஞ்சாவின் அளவு குறித்து மேலதிக விசாரணைகள் கின்னியா போலீசாரால் நடத்தப்பட்டு வருகின்றன.