சாதாரண சிகிச்சைக்காக மீண்டும் திறக்கப்பட்ட வெலிசரை கடற்படை வைத்தியசாலையில் இரவு முழுவதும் பிரித் ஆசீர்வாதிற்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது

வெலிசரை கடற்படை வைத்தியசாலை மீண்டும் சாதாரண சிகிச்சைக்காக திறப்பதை முன்னிட்டு இரவு முழுவதும் பிரித் ஆசீர்வாதிற்கும் நிகழ்வொன்று மற்றும் தானம் வழங்கும் நிகழ்வொன்று குறித்த வைத்தியசாலை வழாகத்தில் மகா சங்கத்தின் ஆசிர்வாதத்துடன் இடம்பெற்றது.

கொவிட் - 19 வைரஸால் பாதிக்கப்பட்ட கடற்படையினர்களுக்கான சிகிச்சை மையமாக கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலை மாற்றப்பட்டுள்ளதுடன் சாதாரண நோயாளிக்கான சிகிச்சைகள் குறைக்கப்பட்டது. தற்போது இலங்கையில் கோவிட் -19 தொற்றுநோயை நிர்வகிப்பதன் மூலம், கடற்படை பொது மருத்துவமனை கொரோனா தொற்று நோய் இல்லாத மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே, 2020 ஜூலை 10 முதல் வைத்தியசாலையின் வழக்கமான சிகிச்சைகள் தொடங்கப்படும். மீண்டும் வைத்தியசாலை திறக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, வைத்தியசாலையில் ஊழியர்கள் ஏற்பாடு செய்த முழு இரவு பிரித் ஆசீர்வாதிற்கும் நிகழ்வு 2020 ஜூலை 08 அன்று இடம்பெற்றதுடன் மறுநாள் காலையில் (2020 ஜூலை 09) மகா சங்கத்திற்கு தானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் த சில்வா, துனை கடற்படைத் தளபதி, கடற்படையின் பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் உட்பட வைத்தியசாலையின் பிற அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.