சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 09 நபர்கள் கடற்படையினரால் கைது
மன்னார், முத்தலம்பிட்டி கடல் பகுதியில் 2020 ஜூலை 07 ஆம் திகதி மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 09 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத செயல்களைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை தொடர்ந்து இலங்கை கடல் மண்டலத்தில் ரோந்து செல்கிறது. அதன்படி, 2020 ஜூலை 07 ஆம் திகதி இரவு, வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் முத்தலம்பிட்டி கடல் பகுதி மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 9 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கு அவர்களினால் பிடிக்கப்பட்ட 22 கடல் அட்டைகள், ஒரு டிங்கி படகு (01), சுழியோடி உபகரணங்கள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர்கள் 26 முதல் 60 வயது வரைலான மன்னார் பகுதியில் வசிப்பவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.