இலங்கையின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராவ் இன்று (2020 ஜூலை 7) கடற்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டார்.

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராவ், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார். குறிப்பாக, எதிர்காலத்தில் கேப்டன் அசோக் ராவ் இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் ஆலோசகர் பதவியை விட்டு வெளியேற உள்ளதால் இவ்வாரு கடற்படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டார்.

கடற்படை தளபதி தனது பதவிக் காலத்தில் கேப்டன் அசோக் ராவ் அளித்த ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளதுடன் மேலும் அவரது எதிர்கால நடவடிக்கைகளுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வைக் குறிக்கும் விதமாக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராவ் அவர்களுக்கு கடற்படை தளபதியால் நினைவு சின்னமொன்று வழங்கப்பட்டது.