செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாத டிங்கி படகொன்றுடன் இரண்டு நபர்கள்(02) கடற்படையினரால் கைது
செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் தலைமன்னார், வான்காலைபாடு கடல் பகுதியில் மீன்பிடித்தலில் ஈடுபட்ட 02 நபர்களை ஒரு டிங்கி படகொன்றுடன் 2020 ஜூன் 30 அன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படை மண்டலத்தின் கடல் மற்றும் மீன்வள வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படை தொடர்ந்து பாதுகாப்பு ரோந்து மற்றும் ஆய்வுகளை நடத்துகிறது. அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2020 ஜூன் 30 அன்று தலைமன்னார் வான்காலைபாடு கடற்கரையில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஒரு டிங்கி படகு ஆய்வு செய்யப்பட்டதுடன் குறித்த படகுக்காக செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லை என்று கண்டறியப்பட்டது. அதன் படி குறித்த டிங்கி படகுவுடன் படகில் இருந்த 02 நபர்களும் அவர்களது மீன்பிடி பொருட்களையும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் 20 முதல் 23 வயதுக்குட்பட்ட பேஸாலை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.