கடற்படையினரால் கடலில் கடத்த முயற்சித்த கேரள கஞ்சாவுடன், 02 சந்தேக நபர்கள் கைது

2020 ஜூன் 24 அன்று வட கடல்களில் இலங்கை கடலோர காவல்படையினருடன் நடத்தப்பட்ட சிறப்பு ஒருங்கிணைந்த தேடல் நடவடிக்கையின் போது, கேரள கஞ்சா கடல் வழியாக தீவுக்கு கடத்த முயன்ற 02 பேரை கடற்படை கைது செய்தது.

சட்டவிரோத போதைப்பொருள் கடல் வழிகள் வழியாக தீவுக்கு கடத்தப்படுவதைத் தடுக்க இலங்கை கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஜூன் 24 ஆம் திகதி வட கடலில் இதேபோன்ற நடவடிக்கையின் போது, இலங்கை கடலோர காவல்படையின் உதவியுடன் கடற்படை, சந்தேகத்திற்கிடமான டிங்கியைத் பரிசோதித்த்துடன், அங்கு கேரள கஞ்சா 57.275 கிலோ கிராம் கண்டுபிடிக்கபட்டது. COVID - 19 உலகளாவிய தொற்றுநோயால் முறையான சுகாதாரம் மற்றும் தூய்மையாக்கல் நடைமுறைகளைப் பின்பற்றி சந்தேக நபர்கள் கடற்படை காவலில் எடுக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 33 மற்றும் 39 வயதுடையவர்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் டிங்கி மற்றும் கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கய்ட்ஸ் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கஞ்சா தொகையின் மதிப்பு சுமார் ரூ. 5.5 மில்லியன். இதற்கிடையில், இந்த ஆண்டு முதல் 06 மாதங்களில் கேரள கஞ்சா வகையைச் சேர்ந்த 2911 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாத்தொகை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.