டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த கடற்படையின் மற்றொரு வேலைத் திட்டம் காலி துறைமுகத்தில் நடைபெற்றது
இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, கொசகைளை ஒழிக்கும் திட்டம் 2020 ஜூன் 22 அன்று காலி துறைமுக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
டெங்கு அச்சுறுத்தல் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.காலி துறைமுக வளாகத்தில் தெற்கு கடற்படை தளபதியின் பங்கேற்புடன் மற்றொரு திட்டம் மேற்கொள்ளப்பட்டது. காலி துறைமுகத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்தவும், குறிப்பாக துறைமுக வளாகத்தில் தண்ணீர் சேகரிக்கக்கூடிய இடங்களை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தெற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் தலைமை தாங்கினார்.
நாட்டில் எந்தவொரு பேரழிவு நிலைமைக்கும் கடற்படை தயாராகி வருகிறது, மேலும் இதுபோன்ற திட்டங்களை பொது இடங்களில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.