கிட்டத்தட்ட 58 கிலோ கிராம் கேரள கஞ்சாத் தொகை கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படை இன்று (ஜூன் 19) யாழ்ப்பாணத்தின் ககரதீவு தீவில் கேரள கஞ்சா வைத்திருந்த இருவரை கைது செய்ய சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டது.
நாட்டிற்குள் கடத்தப்படுவதற்கு முயன்று வரும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடற்படை வழக்கமான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மற்றொரு சிறப்பு நடவடிக்கை இன்று வடக்கு கடற்படை கட்டளையால் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது இன்று காலை வெளிநாட்டுக் கப்பலில் இருந்து இந்த கஞ்சாத்தொகை நாட்டுக்கு கடத்தப்பட்டதாக இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி ககரதீவு தீவில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது டிங்கி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதுடன் பின் கஞ்சாத்தொகையுடன் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் 30 மற்றும் 40 வயதுக்குட்பட்ட மன்னார் சிரிதோபூரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இரண்டு சந்தேக நபர்களும் டிங்கி கப்பல் மற்றும் கஞளசாத்தொகை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.ககரதீவு தீவு மற்றும் அருகிலுள்ள நீரில் கடற்படை மேலும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது .
|