கேரள கஞ்சா கொண்ட நபர் கடற்படையினரால் கைது

2020 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் திகதி ஒமந்தையின நொச்சிமுடே பகுதியில் காவல்துறையினருடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது 6.4 கிலோ கிராம் கேரள கஞ்சா கொண்ட ஒருவரை கடற்படை கைது செய்தது.

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கான தேசிய முயற்சிக்கு ஆதரவாக இலங்கை கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நடவடிக்கைகளின் விரிவாக்கமாக, செட்டிகுளம் பொலிஸ் அதிரடிப்படை (எஸ்.டி.எஃப்) உடன் இணைந்து வட மத்திய கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் 2020 ஜூன் 16 அன்று ஓமந்தையின் நொச்சிமுடே பகுதியில் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான நபர் கண்டறியப்பட்டு சுமார் 6.4 கிலோ கிராம் விற்பனைக்கு தயாரான கேரள கஞ்சா அவரது வசம் மீட்கப்பட்டது. அதன்படி, கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் ஓமந்தையில் வசிக்கும் 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் கேரள கஞ்சாவுடன் ஒமந்தை போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.