சட்டவிரோத மீன்பிடிக்கப் பயன்படும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
2020 ஜூன் 15 ஆம் திகதி கதிரவேலியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பால்சேனி கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படைக்கு கண்டுபிடிக்க முடிந்ததுள்ளது.
சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில் கடற்படை வழக்கமான தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோன்ற நடவடிக்கையின் போது, கதிரவேலியின் மீன்வள ஆய்வாளரின் உதவியுடன் கிழக்கு கடற்படை கட்டளையுடன்டன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு, பால்சேனி கடற்கரையில் இந்த தேடலை நடத்தியது மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களால் மறைக்கப்பட்ட இந்த 100 மீட்டர் நீளமுள்ள அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலையை மீட்டெடுக்க முடிந்ததுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி வலையை மேற்படி நடவடிக்கைக்காக மட்டக்களப்பில் உள்ள மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.